2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறுத்தைக் குட்டிகள் மீட்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


- குணசேகரன் சுரேன்


முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் விற்பனை செய்யும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த இரண்டு  சிறுத்தைக் குட்டிகளை இன்று புதன்கிழமை (13) மீட்டு, அநுராதபுரம் கால்நடை வைத்தியதிகாரி சந்தனஜெயசிங்கவிடம் கையளித்ததாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில்,

மேற்படி பகுதியில் சிறுத்தைக் குட்டிகள் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அதனைப் பார்வையிடச் சென்ற சமயம், சிறுத்தைக் குட்டிகள் வைத்திருந்தவர் அவற்றினைக் கைவிட்டு ஓடிவிட்டார்.

இதனையடுத்து, இரண்டு குட்டிகளையும் மீட்டதுடன், இது தொடர்பில் அநுராதபுரம் மற்றும் கொழும்பிலுள்ள வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம்.

அதற்கமைய, யாழ்ப்பாணம் வருகை தந்த அநுராதபுரம் கால்நடை வைத்தியதிகாரியிடம் மேற்படி சிறுத்தைக் குட்டிகளைக் கையளித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

மேற்படி சிறுத்தைக் குட்டிகள் மூன்று வாரங்கள் வயதுகொண்டவையென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X