2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்து: சிறுவர்கள் காயம்

George   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். சாவகச்சேரி பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (18) முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில்  காயமடைந்த இரண்டு சிறுவர்கள்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரைச் சேர்ந்த தேவதாஸ் ஜெய்ஸன் (வயது 03), தேவதாஸ் கஜானி (வயது 04) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளதுடன் மன்னாரிலிருந்து சாவகச்சேரிப் பகுதியிலுள்ள உறவினர்கள் வீட்டிற்கு தனது பெற்றோருடன் குறித்த சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து  திரும்பிச் சென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்களில் பிரயாணித்த சிறுவர்களது பெற்றோருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லலயெனவும் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .