2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தவறான தொடர்பால் தர்ம அடிவாங்கிய நபர்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.உடுப்பிட்டி பொம்மாந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் பிறிதொரு பெண்ணுடன் கொண்ட தொடர்பால் மனைவியின் சகோதரரிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அடி வாங்கிய ஜெகநாதன் திலீபன் (வயது 34) என்ற நபர், தன்னை மைத்துனர் தாக்கியதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (18) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிமாவட்டதைச் சேர்ந்த பெண்ணொருவருடன் காதல் வயப்பட்டு, திங்கட்கிழமை (18) மேற்படி பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கோண்டாவில் பகுதியால் சென்றுள்ளார்.

இதன்போது, வீதியில் நின்றிருந்த மனைவியின் சகோதரர் இவர்களைக் கண்டு, மோட்டார் சைக்கிளை மறித்து மேற்படி நபரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இவருடன் வந்த பெண், பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டார். இந்நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் ஊறணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .