2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அடிப்படை வசதிகளற்ற நிலையில் கிராஞ்சி மக்கள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற சாவகச்சேரி, கிராஞ்சி கிராம மக்களை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஆர்.ஜானகி, யாழ்.மாவட்ட பெண்கள் சமாதான தலைவி எஸ்.தீபா அகியோர் செவ்வாய்கிழமை (19) நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இக்கிராம மக்கள் வலிவடக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக எந்தவி அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் தாங்கள் பலமுறை அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் தமது பிரச்சனைகளைப்  பற்றி தெரியப்படுத்திய போதிலும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், இக்கிராமத்தில் வாழ்கின்ற மாணவர்களுக்கு இரவில் கல்வி கற்பதற்குரிய வசதிகளை புலம் பெயர் மக்களின் உதவியுடன்  செய்து தருவதாக மக்களுக்கு உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .