2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் பலி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

களவு மற்றும் கொள்ளை ஆகிய குற்றச் செயல்கள் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நஞ்சு விதையொன்றை உண்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசநாயகம் றொனாட்றீகன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை (20) மதியம் நஞ்சு விதையொன்றை உட்கொண்ட இவர் உடனடியாக புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு புதன்கிழமை (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .