2025 ஜூலை 09, புதன்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஆவணங்கள் எதுவுமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 24 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (21) தீர்ப்பளித்தார்.
 
மேற்படி நபர், கடந்த 14ஆம் திகதி தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தி வருகையில், தொண்டமான் நகர்ப்பகுதியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மறித்து விசாரணை செய்தனர்.

இதன்போது, மேற்படி நபர் மது அருந்தியிருந்ததுடன் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் மற்றும் வரிப்பத்திரம் எதுவும் வைத்திருக்கவில்லை.

உடனடியாகக் மேற்படி நபரைக் கைது செய்த பொலிஸார் பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்தனர். தொடர்ந்து, மேற்படி நபருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மேற்படி வழக்கு வியாழக்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் தண்டம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .