2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காலையில் காவடிகள் உள்நுழையத்தடை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தின் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களின் போது, காலை 10.30 மணிக்கு முன்னர் வாகனங்களில் வரும் காவடிகள் ஆலய வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் முதல்வர் மேலும் தெரிவித்ததாவது,

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் மற்றும் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளது.

மேற்படி இரண்டு திருவிழா நாட்களிலும் அதிகளவான காவடிகள் (தூக்கு, பறவை) வாகனங்களில் கொண்டு வரப்படும்.

அவ்வாறான காவடிகள் காலை 10.30 மணிக்குப் பிறகு, சங்கிலியன் வீதி, அரசடி வீதி ஆகிய வீதிகள் ஊடாக மாத்திரம் உட்பிரவேசிக்க முடியும்.

மேலும், அத்தினங்களில் கற்பூர சட்டி எடுப்பவர்கள் வைரவர் கோவில் வாசலில் முன்னால் வைத்து மட்டும் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .