2025 ஜூலை 09, புதன்கிழமை

காணி உரிமை உறுதி செய்யப்பட்டால் வழக்கு தாக்கல் செய்ய தயார்: பொலிஸ்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கீரிமலை காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளுக்கான உறுதிகளை உறுதிப்படுத்தும் பட்சத்தில் பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள 127 ஏக்கர் காணியில்,  உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியிலுள்ள காணிகளை துப்பரவு செய்ய அக்காணிகளின் உரிமையாளர்கள் கடந்த ஜூலை 20ஆம் திகதி முற்பட்டனர். இருப்பினும், அவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பில் அம்மக்கள், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

காணிகளை துப்பரவு செய்யச் சென்றால், பொதுமக்களை கடற்படையினர் தாக்கக்கூடும் எனக்கூறியே காணி துப்பரவு செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, இது தொடர்பில் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து விளக்கமளித்த யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், 'மேற்படி விடயம் தொடர்பில் பொதுமக்களின் காணி உறுதிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேற்படி காணிகள், பொதுமக்களின் காணிகள் என்பது உறுதி செய்யப்பட்டால், அக்காணிகள் சுவீகரிக்கப்பட்டமை தொடர்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .