2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாநகர சபைக்கு புதிய தீயணைப்பு இயந்திரம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்.மாநகர சபைக்கு நவீன வசதிகள் கொண்ட 50 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய தீயணைப்பு இயந்திரம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் கொழும்பில் வைத்து வெள்ளிக்கிழமை (29) வழங்கப்பட்டுள்ளது.

இதனை, யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா நேரில் சென்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிடம் பெற்றுக்கொண்டார்.

மேற்படி தீயணைப்பு இயந்திரம் 4 ஆயிரம் லீற்றர் நீர்க் கொள்வனவைக் கொண்டதாகும். மேலும், அதனுடன் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தண்ணீர் பவுஸரும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 8 மில்லியன் ரூபாய் பெறுமதி கொண்ட பிக்கப் வாகனம் யாழ்.மாநகர சபைக்கு மேற்படி அமைச்சால் வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .