2025 ஜூலை 09, புதன்கிழமை

தீயணைப்பு இயந்திரங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


யாழ். மாநகரசபைக்காக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 80 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட தீயணைக்கும் இயந்திரங்கள் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் யாழ்.மாநகர முதல்வர்  யோகேஸ்வரி  பற்குணராஜாவிடம் வியாழக்கிழமை(28) கையளிக்கப்பட்டது.   

அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொறியியலாளர் எம்.எஸ்.நஸீர,; பணிப்பாளர் என்.ரி.எம்.சிறாஜூத்தீன் மற்றும் யாழ்.மாநகரசபையின் பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் தீயணைக்கும் வாகனங்கள் மூன்றும் அதற்காக ஒரு நிலையான நிர்வாகக் கட்டிடத் தொகுதியும் யாழ்.மாநகர சபை வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .