2025 ஜூலை 09, புதன்கிழமை

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். இளவாலை பனிப்புலம் பகுதியில் 5 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 33 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா ஞாயிற்றுக்கிழமை(31) உத்தரவிட்டார்.

சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரை, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மேலதிக நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

இது பற்றித் தெரியவருவதாவது, 

இளவாலைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பனிப்புலம் பகுதிக்குச் சென்ற போது, மூன்று பேர் அவ்விடத்தில் நின்றுள்ளனர்.

அவர்களைச் சோதனை செய்த போது, மேற்படி சந்தேகநபரின் சட்டைப் பையினுள் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அருகில் நின்றிருந்த இருவரும், மேற்படி சந்தேகநபரிடம் கஞ்சா இருந்தமை தொடர்பில் அறிந்திருக்கவில்லையென விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, இருவரும் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .