2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வழித்தட அனுமதியற்ற பஸ் சாரதிக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

வழித்தட அனுமதியில்லாமல் யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் சேவையில் ஈடுபட்ட பஸ் சாரதிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிநி நந்தசேகரம் செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.

மேற்படி பஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இரவு சேவையில் ஈடுபட்ட பொது, கொடிகாமம் பகுதியில் வைத்து பொலிஸாரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

இதன்போது, பஸ்ஸுக்கு வழித்தட அனுமதி இல்லையென்பது தெரியவந்தது. இதனையடுத்து பஸ்ஸை பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார், பஸ் சாரதிக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (16), நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு நீதவான் அபராதம் விதித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .