2025 ஜூலை 14, திங்கட்கிழமை

துவாரகேஸ்வரனுக்கு பிணை

Kogilavani   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் தம்பி தியாகராசா மகேஷ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரனை 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (06) அனுமதியளித்தார். அத்துடன், இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். 

துவாரகேஸ்வரனுக்கு சொந்தமான யாழ்.கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்று ஏ - 9 வீதி வழியாக செல்லாமல் நல்லூர் செம்மணி வழியாக ஞாயிற்றுக்கிழமை (05) இரவு சென்றபோது பொலிஸார் மறித்து சோதனையிட்டனர்.

பஸ் வழித்தடம் மாறி வந்த குற்றத்துக்காக பொலிஸார் தண்டச்சீட்டு எழுதியபோது, அங்கு வந்த துவாரகேஸ்வரன் தண்டச்சீட்டை கிழித்து எறிந்ததுடன், பொலிஸாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து, துவாரகேஸ்வரனை கைதுசெய்த பொலிஸார், நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (06) மாலை ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .