2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இழுவை படகு தொடர்பில் ஒருவார காலத்தில் முடிவு – சி.வி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, எம்.றொசாந்த்

வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியை சேர்ந்த 23 மீனவர்களின் இழுவை படகு தொடர்பில் ஒரு வார காலத்தில் முடிவு கூறப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

மேற்படி பகுதியில் இழுவை படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வடமாகாண சபை முன்பாக வியாழக்கிழமை (09) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களை இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபட அனுமதியளிக்க வேண்டும் எனக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் 10 பேரை அழைத்த முதலமைச்சர், வடமாகாண சபையில் கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கூறுகையில்,

தங்களின் இழுவை படகுகளிற்கு தடை இல்லையெனவும் அது கடல் வளத்தை பாதிக்காது எனவும் மீனவர்கள் எம்மிடம் கூறினார்கள்.

இது தொடர்பில் மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தினவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேற்படி இழுவை படகு பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட சட்டம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், வேறு இடங்களில் எவ்வாறு இத்தகைய தொழில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடர்பிலும் ஆராயப்படும்.

அத்துடன், தடை செய்யப்பட்டமை தொடர்பிலான சட்ட ஆதாரம் சேகரிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒரு வார காலத்தில் இது தொடர்பில் சரியான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என முதலமைச்சர் மேலும் கூறினார்.

முதலமைச்சரின் உறுதிமொழியையடுத்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு சென்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .