2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காற்றினால் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் கச்சதீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரையும் வெள்ளிக்கிழமை (10) வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் புதன்கிழமை (08) உத்தரவிட்டார்.

மேற்படி 4 இந்திய மீனவர்களும் செவ்வாய்க்கிழமை (07) மாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மேற்படி மீனவர்களை கடற்படையினர், நெடுந்தீவு பொலிஸாரிடம் கையளித்தனர்.

நெடுந்தீவு பொலிஸார் மேற்படி 4 மீனவர்களையும் பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் புதன்கிழமை (08) மாலை ஆஜர்ப்படுத்தினார்கள். இதன்போதே நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

எரிபொருள் தீர்ந்த நிலையில் யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் செப்ரெம்பர் 28ஆம் திகதி கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்களின் வழக்கு வெள்ளிக்கிழமை (10) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

மேற்படி இரண்டும் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகையால் இரண்டு வழக்குகளையும் நீதவான் ஒன்றாக திகதியிட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .