2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பனைமரக் குற்றிகளை கடத்திய நால்வர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., காரைநகர் கோவலம் பகுதியிலிருந்து வட்டுக்கோட்டை பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி பாரவூர்தியில் பனைமரக் குற்றிகளை கடத்திய நால்வர் காரைநகர் முனியப்பர் கோவில் பகுதியில் வைத்து வியாழக்கிழமை (09) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேகநபர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடற்படையினர் முதலில் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, இன்று காலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்படி நபர்களை தங்களிடம் ஒப்படைத்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .