2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மலசலகூட கழிவுகள் அகற்றுவதற்கு திட்டம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

யாழ். நகர் பகுதிகளிலுள்ள 16,000 மலசலகூட கழிவுகளை அகற்றி கல்லுண்டாய் வெளிப்பகுதியில் உரிய முறையில் அழிக்கவுள்ளதாகவும் இதன்மூலம் 80,000 மக்கள் பயனடைவார்கள் என்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சமூக அணிதிரட்டல் அலுவலர் ரி.பாலசுப்பிரமணியம் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாது,

யாழ்ப்பாண தரைத்தோற்றம் சுண்ணாம்புக்கல் பாறையால் ஆனது. பொதுவாக மலசலகூட குழிகளுக்கும் கிணறுகளுக்கும் இடையே 30 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

யாழ் நகர் பகுதிகளிலுள்ள பல கிணறுகளுக்கும் மலசல கூட குழிகளுக்கிடையிலான இடைவெளி 4, 5 அடியாகவே உள்ளது. அது மாத்திரமன்றி இந்த குழிகளின் ஆழத்தில் வித்தியாசம் இல்லாதுள்ளது.

இதன் காரணமாக மலசலகூட கழிவு நீர் (கநஉயட) கிணற்று நீருடன் கலக்கின்றது. 1990ஆம் ஆண்டு ஆய்வுகளிலேயே மலசலகூட நீர் (கநஉயட) காரணமாக தண்ணீர் மாசடைந்திருந்தமை கண்டறியப்பட்டு ஜீ.டி.இஸட் (புவுணு)  நிறுவனம் குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பொதுவாக யாழ்.மாவட்டத்தில் 4 வகையான தண்ணீர் பிரச்சினை காணப்படுகின்றது, அதாவது, சுண்ணாம்பு நீர் பிரச்சினை, நைத்திரேற்று நீரில் அதிகமுள்ள பிரச்சினை, மலத்தொற்று பிரச்சினை, நைதரசன் செறிவு அதிகரித்த பிரச்சினை ஆகியவையாகும்.

யாழ். நகர்ப் பகுதிகளிலுள்ள கிணறுகளில் மலத்தொற்று அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக தொடர் புற்று நோய், சமிபாட்டு நோய், சரும நோய் என்பன ஏற்படுகின்றது.

தற்போதுள்ள இந்த பிரச்சினைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை பாவிப்பது சிறப்பாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .