2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம்'

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்கள் மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(11) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில், வட மாகாணத்துக்கு வெளியே பட்டதாரி ஆசிரிய நியமனங்களைக் கோரும் தமிழ்மொழி மூல பட்டதாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்களுடைய நியமனங்கள் தொடர்பாக கொழும்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடியுள்ளேன். அதற்கான சந்தர்ப்பங்கள் வரும் வரையில் காத்திருக்க வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தீவகத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டிருந்த போது அதனை கட்டியெழுப்பும் வகையில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை நாமே முதற்கட்டமாக வழங்கியிருந்தோம்.

அதன்பின்னரே யாழ். மாவட்டத்துக்;கும் ஏனைய மாவட்டங்களுக்கும் நாடளாவிய ரீதியில் விரிவாக்கம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எமது மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் முன்னேற்றம் காணும் அதேவேளை, சமூகத்தின் நற்பிரஜைகளாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே எனது பிரதான நோக்காகும்.

அதுமட்டுமன்றி இம் மாவட்டம் உள்ளிட்ட வடபகுதியின் அபிவிருத்தி மேம்பாட்டு செயறறிட்டங்களை அரசுடனான நல்லறவு மற்றும் இணக்க அரசியல் ஊடாக முன்னெடுத்து வருகின்றோம்.

இவை அனைத்தும் எமது சுயலாபத்துக்;காக நாம் ஒருபோதும் மேற்கொண்டதும் இல்லை மேற்கொள்ளப் போவதுமில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

ஆனால், தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி தேர்தலில் வெற்றிபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்தைக் கருத்தில் கொண்டே செயற்பட்டு வருகின்றனர் என்பதுடன், மக்களுக்காக எவ்விதமான செயற்றிட்டங்களை முன்னெடுக்க கூட்டமைப்பினர் தயாராகவில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில், கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்களை மக்களின் நலன்சார்ந்த அபிவிருத்தி மற்றும் முன்னேற்பாட்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு  அவற்றை சரியான முறையிலும் உரிய நேரத்திலும் பயன்படுத்துவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என்பதுடன் அதையே நாம் இற்றைவரை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டனர். 





 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .