2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அலைபேசியால் அகப்பட்ட திருடன்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், வதிரி பகுதியிலுள்ள வீடொன்றில் நகை, அலைபேசி ஆகியவற்றை திருடிய சந்தேகநபர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (14) மாலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் கூறினர்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி 33 ஆயிரம் ரூபாய்ஹ1 பெறுமதியான நகைகள் மற்றும் அலைபேசி ஆகியன திருட்டுப்போயிருந்தன. 

இந்நிலையில், திருடிய சந்தேகநபர் தான் திருடிய அலைபேசியின் சிம் அட்டையை மாற்றாமல் அதே சிம் அட்டையை தொடர்ந்து பாவித்து வந்துள்ளார்.

தொலைபேசி நிறுவனத்தின் உதவியுடன் குறித்த சிம் அட்டையை பாவிக்கும் நபர் அடையாளங்காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .