2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நால்வர் படுகாயம்

George   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். உடுப்பிட்டி பொக்கணைப்பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நால்வர், ஊறணி வைத்தியசாலையில் புதன்கிழமை(16) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார், வியாழக்கிழமை(16) தெரிவித்தனர்.

உடுப்பிட்டி பொக்கணை பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி பாஸ்கரன்(வயது 48), பாஸ்கரன் வசிகுலம்(வயது 18), பாஸ்கரன் வசீகரன்(வயது 21) மற்றும் தொண்டைமானாறு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் புஸ்பராசா(வயது 33) ஆகிய நால்வருமே படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .