2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முதியோர் நலன்காக்கும் சங்கம் தொடர்பில் கலந்துரையாடல்

George   / 2014 ஒக்டோபர் 16 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


முதியோர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்கள் நலன் காக்கவும் சங்கம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். கிளை தலைவர் தங்கவேல் கனகராஜ், வியாழக்கிழமை (16) கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2ஆம் திகதி கைதடி முதியோர் இல்லத்தில் முதியோர் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பில் நடத்;தப்பட்ட செயலமர்வின் இறுதியில், முதியோர் உரிமைகளை பாதுகாக்கின்ற ஒரு பலமான அமைப்பின் தேவை தொடர்பில் ஆராயப்பட்டது.

அது தொடர்பாக, பிராந்தியத்தில் இருக்கின்ற அரச, அரச சார்பற்ற சமூகம் சார்ந்த நிறுவனங்களை உள்ளடக்கியதான முதியோர் உரிமைகளை பாதுகாக்கின்ற அமைப்பின் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். கிளை அலுவலகத்தில் வியாழக்கிழமை(16) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், சுகாதார துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், வங்கித்துறை அதிகாரிகள், வைத்தியத்துறை சார்ந்தவர்கள், சமூக சேவை திணைக்கள உறுப்பினர்கள், பொலிஸ் திணைக்களத்தினர் போன்ற முதியோர் உரிமைகளை பாதுகாக்கின்ற அனைத்து நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர்.

முதியவர் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதுடன், இந்த அமைப்பு எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு துறைசாந்தவர்களை உள்ளடக்கி இன்று உபகுழு ஒன்றை அமைத்துள்ளோம்.

கிராமங்களிலும், பிரதேச மட்டங்களிலும் இயங்காமல் இருக்கின்ற முதியோர் சங்கங்களை இயங்க செய்வதற்கு ஒரு ஆலோசனை குழுவாகவும் இது செயற்படவுள்ளது.

இந்த குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் எதிர்காலத்தில் எவ்வாறான ஒரு நோக்கங்களை, செயற்பாடுகளை கொண்டதாக இந்த அமைப்பு செயற்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கவுள்ளோம்.

இக் குழுவினுடைய அடுத்தகட்ட கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன் எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற முதியவர்களை பாதுகாப்பது, இங்கிருக்கும் சமூகத்தினருடைய பொறுப்பு என்பதுடன் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .