2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நரியிட்டான் வைரவர் ஆலய வேள்வி தடுப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தீபாவளி தினமான நேற்று புதன்கிழமை (22) மல்லாகம், நரியிட்டான் வைரவர் ஆலயத்தில் இடம்பெறவிருந்த மிருக பலி பூஜை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சைவ மஹா சபை மற்றும் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஆகியவை இணைந்து மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையாலேயே இந்த மிருகபலி பூஜை தடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி வேள்விப் பூஜைக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று மேற்படி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் வேள்வியை தடுத்து நிறுத்தினர்.

மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் தீபாவளி தினத்தன்று மிருக ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடுவது வழமை. அந்தவகையில், நேற்று புதன்கிழமை (23) மிருக பலியிடும் பொருட்டு 25 ஆடுகள் ஆலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

இருந்தும், தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை மற்றும் தெல்லிப்பளை பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதி பெறப்படாமல் இந்த வேள்விக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வேள்வியை நடத்துபவர்கள் பிரதேச சபையிடம் அனுமதி பெற்று, வேள்வியில் வெட்டப்படும் ஒவ்வொரு ஆட்டையும் பொதுச்சுகாதார பரிசோதகரின் பரிசோதனைக்கு அனுமதியளிக்க வேண்டும்.

அத்துடன், வேள்வி இடம்பெறும் பகுதி சுற்றி அடைக்கப்பட்டு, வெட்டப்படும் ஒவ்வொரு ஆடும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னரே அடுத்த ஆடு, அவ்விடத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்.

இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றி வேள்வி நடத்துவதற்கே  மல்லாகம் நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறியே மேற்படி ஆலயத்தில் நடத்தப்படவிருந்த வேள்வி தடுத்து நிறுத்தப்பட்டது என சைவ மஹா சபை மற்றும் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஆகியன தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .