2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தீபாவளியன்று மாடறுத்தவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், துன்னாலை, வேம்படி பகுதியில் திருட்டு மாட்டை இறைச்சியாக்கிக் கொண்டிருந்த இரு சந்தேகநபர்கள், புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபர்களிடம் இருந்து 40 கிலோ மாட்டிறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், தொடர்ந்து வெள்ளிக்கிழமை (24) நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, வல்லை வீதி வழியாக 4 போத்தல் மதுபான போத்தல்களை கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவரை புதன்கிழமை (22) கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தீபாவளி தினத்தன்று மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி சந்தேகநபர் மதுபானம் கொண்டு சென்றதாலேயே கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .