2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண சபையின் காணிக் கடிதத்தை ஜனாதிபதி பரிசீலிப்பார்: லலித் வீரதுங்க

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் கடிதம் விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

வடமாகாண சபையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற காணி தொடர்பிலான விசேட அமர்வில், 13ஆவது திருத்தச் சட்டத்தின் 154 ஜீ (1) இல் குறிப்பிட்டவாறு, மாகாண சபை நிரலின் 18ஆவது பந்தியின் பின்னிணைப்பு 2இல் விபரிக்கப்பட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதியை கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த தீர்மானம், கடந்த 15ஆம் திகதி வடமாகாண அவைத்தலைவரால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்படி கடிதம் கிடைக்கப்பெற்றதாகவும் அந்த கடிதம் விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கடிதம் மூலம் வடமாகாண அவைத்தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த கடிதம் திங்கட்கிழமை (27) தனக்கு கிடைக்கப்பெற்றதாக வடமாகாண அவைத்தலைவர் உறுதிப்படுத்தினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .