2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நலன்புரி முகாம்களிற்கு கொரிய தூதுவர் விஜயம்

George   / 2014 நவம்பர் 04 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

 
யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (04) விஜயம் மேற்கொண்ட கொரிய நாட்டு தூதுவர் வோன் ஸாம் ஷங், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும் மருதனார்மடம் கண்ணகி முகாம் ஆகிய நலன்புரி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
 
முகாம்களின் நிலைமைகள் பற்றி பார்வையிட்ட தூதுவர், நலன்புரி நிலைய மக்களுடன் எவ்வித சந்திப்புக்களையும் மேற்கொள்ளவில்லை.
 
யாழ்ப்பாணத்தில் பருவ மழை பெய்து வருவதால் முகாம் பகுதி சேறும் சகதிகளுமாக இருக்கும் நிலைய தூதுவர் அவதானித்ததுடன், நலன்புரி முகாம்களிலுள்ள சமூகம்சார் நலத்திட்ட விடயங்கள் தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டறிந்தார்.
 
தூதுவருடன் உடுவில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலனும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .