2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ். மாவட்ட நலன்புரி முகாங்களுக்கு நிதியுதவி

Menaka Mookandi   / 2014 நவம்பர் 07 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்திலுள்ள 8 நலன்புரி முகாம்களுக்கு சுகாதார மற்றும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள 4 மில்லியன் ரூபாய் நிதியுதவி, அந்தந்த பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று புதன்கிழமை (05) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி முகாம்களின் தலைவர்கள் இது தொடர்பாக கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கோணாப்புலம் நலன்புரி முகாம், மதவடி நலன்புரி முகாம், நீதவான் நலன்புரி முகாம், கும்பளை நலன்புரி முகாம், கண்ணகி நலன்புரி முகாம், சபாக்திப்பிள்ளை நலன்புரி முகாம், ஊறணி நலன்புரி முகாம், நாவற்குழி குடியேற்றத்திட்ட நலன்புரி முகாம் ஆகிய 8 நலன்புரி முகாம்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி அந்தந்த பிரதேச சபைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகள் அனைத்து இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .