2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அனுமதியின்றி மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 27 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி பாரவூர்தியில் 7 பசு மாடுகளை கொண்டுசென்ற இரண்டு சந்தேகநபர்களை புத்தூர், வாதாரவத்தை பகுதியில் புதன்கிழமை (26) இரவு கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் வியாழக்கிழமை (27) தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், புன்னாலைக்கட்டுவன் பகுதியிலிருந்து கிளிநொச்சியில் இருக்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு பசுமாடுகள் கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் பசுமாடுகள் கொண்டு செல்லப்படுவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் ஆடுகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களை 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் புதன்கிழமை (26) தீர்ப்பளித்தார்.

மேற்படி நபர்கள், கடந்த 25ஆம் திகதி தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆடுகளை பண்டத்தரிப்பிலிருந்து திருடியுள்ளனர். தொடர்ந்து, புதன்கிழமை (26) காலையில் திருடிய ஆடுகளை மல்லாகம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த நபர்கள் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர், நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அது திருடப்பட்ட ஆடுகள் என்பது தெரியவந்தது. நபர்களை கைது செய்த இராணுவத்தினர், சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .