2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மீன்பிடி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

George   / 2014 நவம்பர் 27 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தால் யாழ். மாவட்ட மீன்பிடி அபிவிருத்தி தொடர்பில் 12 வேலைத்திட்டங்கள் இவ்வருடம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி, வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.

12 வேலைத்திட்டங்களில் 8 வேலைத்திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளதுடன், மேலும் 4 வேலைத்திட்டங்கள் தற்போது இடம்பெற்று வருவதுடன், அவை இவ்வருடத்துக்குள் நிறைவடையும்.

நிறைவுபெற்ற 8 வேலைத்திட்டங்களும் மீனவர்களுக்கு தளபாட உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டங்கள் ஆகும். அத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 4 வேலைத்திட்டங்களும் கட்டிட நிர்மாணம் தொடர்பான வேலைத்திட்டங்கள் என அவர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .