2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சேதமடைந்த கட்டிடத்திற்கான திருத்த வேலைகள் இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 27 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

யாழ். மின்சார நிலைய வீதியில், சேதமடைந்திருந்த பழைய கட்டிடம் ஒன்றில் மாநகர சபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலை பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.

மிகவும் சேதமடைந்திருந்த கட்டிடத்தை, அதன் உரிமையாளர் மேற்பூச்சு பூசி ஒப்பனை செய்து, அதன் மேல் மாடிக்கட்டிடங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் மாநகர சபைக்கு தகவல் கிடைக்கப்பெற்று, கட்டிட பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கொண்டு கட்டிடம் அமைப்பது தொடர்பில் பொறியியலாளரின் சான்றிழை பெற்ற பின்னரே கட்டிடம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் ஆணையாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .