2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பெண்ணின் கூந்தலை கத்தரித்தவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள பெண்ணின் கூந்தலை கத்தரித்தவர் என்ற சந்தேகத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (28) கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி இரவு நுழைந்த சிலர், வீட்டிலிருந்த பெண்ணை பலவந்தமாக மடக்கி பிடித்து கூந்தலை கத்தரித்தனர்.

பெண்ணின் கூந்தலை கத்தரிக்கும் போது, ஏற்பட்ட இழுபறியில் பெண்ணின் 13 வயது மகளுக்கும் கத்தரிக்கோல் வெட்டு காயங்கள் ஏற்பட்டன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (28) கைது செய்தனர். மற்றய நபர்களையும் தேடி வருவதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி பெண்ணின் கணவர் வெளிநாட்டிலுள்ள நிலையில் தனது மூன்று பிள்ளைகளுடன் பெண் தனியாக வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .