2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Thipaan   / 2014 நவம்பர் 29 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். சாவகச்சேரி பகுதியில் விருந்தினர் விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உட்பட ஏழு பேரையும் தொடர்ந்தும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை, வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டார்.

விபசார விடுதியிலிருந்து, பம்பலப்பிட்டியை சேர்ந்த 32 வயதுடைய பெண், விடுதி முகாமையாளர், விடுதி உதவியாளர், பெண்ணை விபசாரத்துக்கு அழைத்து வந்தவர் மற்றும் மூன்று வாடிக்கையாளர்கள் ஆகியோர் கடந்த 5ஆம் திகதி கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, குறித்த விருந்தினர் விடுதி மற்றும் அருகிலிருந்த மேலுமொரு விருந்தினர் விடுதி என்பன நீதிமன்ற உத்தரவுக்கமைய சாவகச்சேரி நகர சபையால் சீல் வைக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் ஏழு பேரையும்; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .