2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Thipaan   / 2014 நவம்பர் 29 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வின் ஒருகட்டமாக அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (28) கையளிக்கப்பட்டன.

நாம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கல்வியின் வறுமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையிலேயே மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இவ் நிகழ்வில் சுமார் 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கல்வியின் அடைவுமட்டத்தில் காட்டும் முன்னேற்றத்திற்கேற்ப தொடர்ந்து உதவிகள் வழங்கப்படுமென நாம் நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், நாம் நண்பர்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களது தேவைப்பாடுகள் தொடர்பாக ஆரய்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .