2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலையின் அறபுமொழி பீடாதிபதியாக மஸாஹிர் தெரிவு

Gavitha   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அறபுமொழி பீட புதிய பீடாதிபதியாக எஸ்.எம்.எம். மஸாஹிர் நியமிக்கப்பட்டுள்ளதாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் வியாழக்கிழமை (04) தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறை தலைவராக கடமையாற்றிய இவர், பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு புதிய பீடாதிபதியாக தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் விஷேட இளமாணி, முது தத்துவமாணி பட்டத்தையும் மலேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் றியாத் மன்னர் சவூத் பல்கலைக்கழகத்தில் பட்ட பின் படிப்பு டிப்ளோமா ஆகிய பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.

புதிய பீடாதிபதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழி பீடத்தின் மூன்றாவது பீடாதிபதியாவார். இவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளை கொண்டதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .