2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இந்தியா தயார்'

George   / 2014 டிசெம்பர் 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்திய துணைத்தூதரக உதவி அத்தியட்சகர் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (06) தெரிவித்தார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு; பல்வேறு நிகழ்வுகள் யாழ். விழிப்புலற்றோர் சங்கத்தலைவர்  வி.கனகசபை தலமையில் யாழ். மத்திய கல்லூரியில் சனிக்கிழமை(06) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் பிரித்துப்பார்க்கவோ பாவம் என நினைக்கவோ வேண்டியவர்கள் அல்ல.

அவர்களை பார்த்து பரிதாபப்படாது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். யாழ்ப்பாண மக்களிடம் பொதுவாக மனிதனை நேசிக்கும் பண்பு இருக்கிறது. பெயர் சொல்லாது பலர் இன்றும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

யாழ். மக்களிடம் நான் இன்னும் கேட்டுக்கொள்வது மாற்றுத்திறனாளிகளை மதித்து அவர்களை எம்முள் ஒருவராக சமமாக மதித்து அவர்களுக்கு நல்ல விடயங்களை செய்யவேண்டும் என்பதே.

அவர்களுக்கு இந்திய அரசு உதவுவதற்கு எப்போதும் தயாராக உள்ளது. எம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்வோம் என உறுதியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவர் ச.ரூபராஜா கருத்துத் தெரிவிக்கையில்,
வன்னியில் பலர் தமது அங்கங்களை இழந்துள்ளார்கள். அவர்களையும் எந்த வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைத்து செயற்பட வேண்டும்.

முன்பு செவிடர்கள், குருடர்கள் என்று அழைத்த நாம் இன்று மாற்றுத்திறனாளிகள் என அழைக்கிறோம். அந்த வகையிலே நாம் உயர்ந்து நிற்கிறோம்.

அது போலவே வங்கிகளிலும் மற்றய பொது இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து செயற்பட வேண்டும். அதன் மூலம் நீங்கள் உயர்ந்த சேவையாற்றுபவர்களாகிறீர்கள் என தெரிவித்தார்.

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதரக உதவி அத்தியட்சகர் எஸ்.டி.மூர்த்தி, வேல்ட் விஷன் நிறுவன செற்பாட்டு முகாமையாளர் ஜெயால்ட் அன்ரனி, இளைஞர் சேவைகள் மன்ற உதவி இயக்குனர் ஐ.தவேந்திரன், விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .