2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடியவர் கைது

George   / 2014 டிசெம்பர் 06 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்


நெல்லியடி பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பித்து சென்ற சந்தேகநபரை (வயது 29) துன்னாலை குடவத்தை பகுதியில் வைத்து சனிக்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

 இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

வல்லிபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட நபரையும் கன்ரர் ரக வாகனத்தையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 

வாகனத்தை பொலிஸ் நிலைய வளாகத்தில் ஒதுக்கு புறமாக விடுமாறு சந்தேக நபருக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தை ஒதுக்கு புறமாக விடுவது போன்று பாசாங்கு செய்து விட்டு பொலிஸ் நிலைய மதிலை உடைத்து வாகனத்துடன் தப்பியோடியுள்ளார். 

அவரை பின் தொடர்ந்த பொலிஸார் துன்னாலை குடவத்தை பகுதியில் வைத்து கைது செய்தனர். 

சந்தேகநபரை பருத்தித்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .