2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்திய இருவருக்கும் விளக்கமறியல்

Sudharshini   / 2014 டிசெம்பர் 07 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

முகப்புத்தகத்தின் மூலம் தவறான படங்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொ.குமாரசாமி ஞாயிற்றுக்கிழமை (07) உத்தரவிட்டார்.

கரவெட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த யுவதியொருவரை, வரணியை சேர்ந்த 25 வயதுடைய நபர் காதலிக்கும்படி முகப்புத்தகத்தினூடாக வற்புறுத்தி வந்துள்ளார். யுவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, தனது முகப்புத்தகத்தினூடாக ஆபாச படங்களை யுவதியின் முகப்புத்தகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த யுவதி தனது குடும்பத்தினருடன் முகப்புத்தகத்தை பார்த்த போது, இணைக்கப்பட்டிருந்த ஆபாச படங்களால் அசௌகரியப்பட்ட யுவதி, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (05) முறைப்பாட்டை பதிவு செய்தார்.

யுவதியின் முறைப்பாட்டின் பிரகாரம் 25 வயதுடைய வரணியை சேர்ந்த சந்தேகநபர் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, அல்வாய் மனோகர பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், தனது மனைவியின் தங்கையின் முகத்தின் படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், சனிக்கிழமை (06) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் 31 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், சந்தேகநபர் தனது திருமணத்தை குழப்பும் நடவடிக்கையிலும் பல காலமாக ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் கூறியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனையடுத்தே, இரண்டு சந்தேகநபர்களும் ஞாயிற்றுக்கிழமை (07) பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்தெ மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .