2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முரண்பாடுகளால் தமிழர்கள் அழிவை சந்தித்தனர்: ஈ.பி.டீ.பி

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முரண்பாடுகளை வளர்த்து கொண்டிருப்பதனால் மூன்று தசாப்த காலம் எமது இனம் அழிவுகளை சந்திக்க வேண்டி நேர்ந்ததாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் தெற்கு இளைஞர் அணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

ஒற்றுமையும் இணங்கிபோதலும் எப்போது எமது மக்களிடமிருந்து விலகி சென்றதோ, அன்றிலிருந்து தமிழ்மக்களது வலிகளும், சோகங்களும் வரலாறாகி சென்றுகொண்டுதான் இருக்கின்றன. தமிழ் மக்களது எதிர்கால தேவைகளை இலகுவான வழியில் செயற்படுத்துவதற்கு தூர நோக்கம் கொண்ட இளைஞர்களே தற்போதைய நிலையில் எமக்கு  தேவைப்படுகின்றனர்.

கடந்தகாலங்களில் கற்று கொண்டவற்றை வைத்து கொண்டு எதிர்காலத்தில் ஒரு முற்போக்கு சிந்தனையுடைய சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை உருவாக்குவதற்காகவே இந்த இளைஞர் அணியின் செயற்பாடுகள் அனைத்தும் இருக்கவேண்டும்.

நிச்சயமாக எந்த சூழ்நிலையிலும் இந்த இளைஞர்களை எமது கட்சி சுயநலத்துக்காகவும் தவறான வழியிலும் செல்வதற்கும் அனுமதிக்க போவதில்லை. ஒரு சிறுவிதைதான் பெரும் விருட்சமாகின்றது. உங்கள் போன்ற ஒவ்வொரு இளைஞர்களதும் கூட்டு சேர்வையின் மூலம் தான் ஒட்டுமொத்த தழிழ் சமூகத்தினதும் எதிர்காலம் தங்கியுள்ளது.

கடந்தகாலங்களில் அறிவாயுதத்தை எமது இனம் கையிலெடுக்காததன் விளைவுதான், கடந்துசென்ற 30 ஆண்டுகால அழிவுகளுக்கு எமது இளம் சந்ததியினரை பலிகொடுக்கும் நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .