2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இரத்தக் கறைபடிந்த பூமி, புனித பூமியாக மாறுமா? : சூசையானந்தன்

George   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

இரத்தக் கறைபடிந்த பூமி பரிசுத்தரின் கால்பட்டு புனித பூமியாக மாறுமா? என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன் திங்கட்கிழமை (08) கேள்வியெழுப்பியுள்ளார்.

பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் சூசையானந்தன் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

றோமன் கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் தொடர்பான செய்திகள் மிகவும் பரபரப்பாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

முக்கியமாக மன்னாரிலுள்ள புனித தலமான மடுத்திருத்தலத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை, அதி வணக்கத்துக்குரிய மன்னார் ஆயர், குரு முதல்வர் மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிசுத்த பாப்பரசரின் விஜயம் தெற்கிலே பொதுபல சேனாவுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயினும் ஈழத்தமிழருக்கு குறிப்பாக கத்தோலிக்க தமிழர்களுக்கு இவரது விஜயம் இனிப்பான செய்தியாகவே உள்ளது.

நவாலி தேவாலய படுகொலை, மடுத்தேவாலய படுகொலை, வங்காலை புனித ஆலய பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் படுகொலை ஆகிய படுகொலைகளை வத்திக்கான் அரசுக்கு நாம் நினைவூட்ட விரும்புகிறோம்.

மேலும் பரிசுத்த பாப்பரசரின் வருகையால், பல வருடங்களாக காடுகளில் அவல வாழ்வு வாழும் நூற்றுக்கணக்கான  மன்னார் கத்தோலிக்க தமிழ் குடும்பங்கள் தமது சொந்த இடமான முள்ளிக்குளம் திரும்பவேண்டும்.

அதேபோல் வலி. வடக்கில் இருந்து துரத்தப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் தமது இருப்பிடம் திரும்ப வழிபிறக்க வேண்டும். தமிழ்தேசியம் விடுதலை பெற வழியேற்பட வேண்டுமெனவும் நாம் விரும்புகிறோம்.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து சிங்கள கத்தோலிக்கர்களை கவரும் இந்த தந்திரோபாயம் தமிழ் கத்தோலிக்கர்களிடம் பலிக்காது என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .