2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மூத்த பிரஜைகளுக்கு முச்சக்கரவண்டி

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 09 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) மூத்த பிரஜைகள் குழுவினரின் போக்குவரத்து நலன்கருதி, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் முச்சக்கர வண்டியொன்று திங்கட்கிழமை (08) கையளிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீ.மோகனன் ஊடாக இந்த முச்சக்கர வண்டியை ஆளுநர் கையளித்தார்.

தங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கு வாகனம் ஒன்றை வழங்கும்படி மூத்த பிரஜைகள் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த முச்சக்கர வண்டியை வழங்குவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .