2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

போலி நகையை அடகு வைக்க முற்பட்டவருக்கு அபராதம்

Thipaan   / 2014 டிசெம்பர் 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

வட்டுக்கோட்டையிலுள்ள வங்கியொன்றில் போலி நகையை அடகு வைக்க முற்பட்ட நபருக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவன், இரண்டு வாரங்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் சமூகப்பணி மேற்கொள்ளும்படி திங்கட்கிழமை (08) உத்தரவிட்டார்.

அராலி மத்தி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் கடந்த நவம்பர் மாதம் போலி நகையொன்றை அடகு வைப்பதற்காக வட்டுக்கோட்டையிலுள்ள வங்கியொன்றுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, நகை போலியென்பதை அறிந்த வங்கி முகாமையாளர், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிஸார், குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இச் சந்தேகநபர், நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை (08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .