2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கோழி வளர்ப்பு உபகரணங்கள் வழக்கல்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 09 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்ட நிதி மூலம், யாழ்.மாவட்டத்தில் வருமானம் குறைந்த 12 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழி வளர்ப்பு உபகரணங்கள் திங்கட்கிழமை (08) வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் கால்நடை வைத்தியதிகாரி பணிமனையில் வைத்து இந்த உபகரணங்களை முதலமைச்சர் வழங்கி வைத்தார். கோழிக்கூடுகள் அமைப்பதற்கான உபகரணங்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன இதன்போது வழங்கப்பட்டன.

உபகரணங்களை வழங்கி முதலமைச்சர் உரையாற்றுகையில், 'வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 குடும்பங்களுக்கும் வவுனியாவில் ஒரு குடும்பத்துக்கும் உபகரணங்கள் வழங்கப்படும்' என்றார்.

இந்த கோழிக்குஞ்சுகளை வளர்த்து அவற்றின் மூலம் வருமானத்தை அதிகரித்து உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் உதவிகள் செய்வதற்கு நாங்கள் தாயராக இருக்கின்றோம்' என முதலமைச்சர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .