2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கசிப்பு வடித்த பெண் கைது

Thipaan   / 2014 டிசெம்பர் 09 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். துன்னாலை கிழக்கு ஆட்டுப்பட்டி பகுதியிலிலுள்ள வீடொன்றில் வைத்து கசிப்பு உற்பத்தி செய்த 32 வயதுடைய பெண்ணொருவரை செவ்வாய்க்கிழமை (09) கைது செய்ததாக, நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித்.சி.பெரேரா தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார், பெண்ணை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 1 போத்தல் கசிப்பு, 7 ½ லீற்றர் கோடா, அதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றினர்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்த பெண்ணுக்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .