2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 09 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த யாழ். மாவட்ட வர்த்தகர்கள் 4 பேருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க, யாழ். நீதவான் பொ.சிவகுமாரால் செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டதாக யாழ். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் தெரிவித்தார்.

அதிகார சபை அதிகாரிகள் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சொக்லேட் வகைகள் என்பன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நான்கு வர்த்தகர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .