2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா கடத்துவோருக்கு எதிராக இந்தியா நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 09 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-போ.சோபிகா

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவோருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'கடந்த சில மாதங்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது அதிகமாக இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளேன். இந்த கடத்தலை தடுப்பதற்காக விசேடமாக அமைக்கப்பட்ட பொலிஸ், கடலோர காவல் படை ஆகியன கூட்டுச்சேர்ந்து இந்த கடத்தலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்' என்றார்.

'இந்த கடத்தல் நடவடிக்கைகள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். இது போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும்' என்று அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .