2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண அமைச்சர்களுக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புக்கள்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களுக்கு, மேலதிக அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதங்கள், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் அந்தந்த அமைச்சர்களுக்கு புதன்கிழமை (10) வழங்கப்பட்டன.

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சராக இருக்கும் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு, மேலதிகமாக கூட்டுறவு, நீர்வழங்கல், மற்றும் உணவு வழங்கல் - உணவு விநியோகம் ஆகிய மூன்று அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாண சுகாதார அமைச்சராக இருக்கும் பத்மநாதன் சத்தியலிங்கத்துக்கு, சமூக சேவைகள் புனர்வாழ்வு மற்றும் பெண்கள் விவகாரம் ஆகிய இரண்டு அமைச்சு பொறுப்புக்கள் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வியாபார மற்றும் கிராமிய அமைச்சராக இருக்கும் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரனுக்கு மேலதிகமாக, வீதி அபிவிருத்தி, மோட்டார் திணைக்களம் ஆகிய இரண்டு அமைச்சு பொறுப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் உருவாக்கப்பட்ட இந்த மேலதிக அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்கள், வடமாகாண ஆளுநரின் சிபாரிசுக்கு அனுப்பப்பட்டு, இவற்றை ஆளுநர் சிபாரிசு செய்து புதன்கிழமை (10) வழங்கியுள்ளார்.

விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம், மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருடன் முதலமைச்சரும் ஆளுநர் அலுவலகத்துக்குச் சென்று அமைச்சுக்களை பொறுப்பேற்றுக்கொள்ளும் உத்தியோகபூர்வ கடிதத்தில் கையொப்பமிட்டு மேலதிக அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .