2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிங்கள மக்களிடையே இனவாதம் தூண்டப்படுகிறது: நாகமுவ

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சிங்கள தலைவர்கள், சிங்கள மக்களிடையே இனவாதத்தை தூண்டுகிறார்கள் என்று முன்னிலை சோஷலிசக் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, இலங்கை சோஷலிசக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் துமிந்த நாகமுவ புதன்கிழமை (10) தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய இரண்டு பிரதான வேடபாளர்களிடமும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான பதில் இல்லை. தனி மனிதர்களின் சுயநலத்துக்காக கட்சியில் இருந்து மாறுவது போன்ற பொய்யான செயற்பாடுகளில் சில தலைமைகள் ஈடுபட்டுள்ளன. மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு மக்களோடு இணைந்து செயற்படுவதற்கு எவரும் முன்வருவதாக இல்லை' என்றார்.  

'இந்த அரசு பெருந்தொகையான பணத்தை செலவளித்து இராணுவ கட்டமைப்பையும் மதம் சார்பான குழுக்களையும் அமைத்து வருகின்றது. இவை இரண்டின் மூலமாகவும் மக்களின் இயல்பு வாழ்கையை அடக்கி வைத்துள்ளது. தனி மனித பிரச்சினைகளை இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து கல்வி பொருளாதாரம் போன்ற துறையில் மக்களை முன்னேற்றுவதற்கு ஒன்று சேர்ந்து செயற்பட மக்கள் ஒத்துளைப்பு தர வேண்டும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .