2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

குறைந்த விலையில் முச்சக்சக்கர வண்டிகள் வழங்கல்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியால் குறைந்த விலையில் முச்சக்கரவண்டிகள் வழங்கும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை (11) முதல் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டியை 4 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆன பெறுமதிக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும். அதனை பயனாளிகள் குத்தகை அடிப்படையில் செலுத்தவேண்டும்.

அதேவேளை, முச்சக்கரவண்டிக்கான பதிவு கட்டணம் மற்றும் அதனை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் செலவுகள் ஆகியவற்றை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி பொறுப்பேற்று கொள்கின்றது.

ஒவ்வொரு முச்சக்கரவண்டிகளை வழங்குகையில் 62 ஆயிரம் ரூபாய் ஆன தொகை கட்சிக்கு செலவாகின்றதுடன், இவ்வாறு 150 முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 20 முச்சக்கரவண்டிகள் வியாழக்கிழமை (11) வழங்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .