2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நகரத்திட்டமிடல் கண்காட்சி

Sudharshini   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பொ.சோபிகா

உலக நகரத்திட்டமிடல் தினத்தை முன்னிட்டு, யாழ் பல்கலைக்கழக சமுதாய பிராந்திய திட்டமிடல் கற்கை நெறியின் இளம் திட்டமிடலாளர் சங்கத்தினருடைய கண்காட்சி நிகழ்வு இன்று சனிக்கிழமையுடன் (3) நிறைவடையவுள்ளது.

இக்கண்காட்சியில், யாழ்ப்பாண நகர அபிவிருத்தி மாதிரிகள், சிங்கப்பூர் மரீனா குடா, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு துறைமுகம், தெற்குவிரிவாக்கற் திட்டம், மகாவலி அபிவிருத்தித்திட்டம், பெருந்தோட்ட குடியிருப்புக்கள், இரணைமடு யாழ்ப்பாண நீர்விநியோகத்திட்டம், நியூயோர்க் நகரம், பிஸான் பூங்கா சிங்கப்பூர், விகாரமா தேவி பூங்கா, புராதன நாகரீககால இடம்சார் திட்டமிடல் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

'அனர்த்த மீட்சித்திறனுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ச.ரவி, 'நிலைத்து நிற்கக்கூடிய எதிர்கால நகரங்களை திட்டமிடுதல்' என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் செ.இரவீந்திரன் ஆகியோர் இந்திகழ்வில் கருத்துரைகளை வழங்கினார்கள்.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், கபை;பீட பீடாதிபதி பி.சிவநாதன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சி கடந்த வியாழக்கிழமை (11) தொடக்கம் நடை பெற்று வருகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .