2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலாமை வைத்திருந்தவர்களுக்கு பிணை

Thipaan   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


கடலாமை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், சனிக்கிழமை (13) உத்தரவிட்டார்.

இரண்டு பேருடைய வழக்கையும் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், 4 கடலாமைகளையும் மண்டைதீவு கடற்பகுதியில், கடற்படையினரின் உதவியுடன் விடும்படி யாழ்ப்பாண பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

யாழ். குருநகர் தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் 2 அடி நீளமுள்ள கடலாமை ஒன்றை வைத்திருந்த ஒருவர் வெள்ளிக்கிழமை (12) இரவும், யாழ். பாஷையூர் பகுதியில் 3 கடலாமைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமையும் (13) யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு சந்தேகநபர்களும் நீதவானின் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (13) மாலை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .