2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

எஞ்சிய நிதியை செலவு செய்தல் தொடர்பில் ஆராய்வு

George   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபைகளின் 2014ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் செலவு செய்யப்படாமல் இருக்கும் நிதியை செலவு செய்வதற்கான வேலைத்திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில், பிரதேச சபைகளின் வரவு – செலவுத்திட்டம் நிதியின் மிகுதியை எந்தெந்த வேலைத்திட்டங்கள் மூலம் செலவு செய்வது, அத்துடன் சபையின் எதிர்கால நடவடிக்கைகளை வினைத்திறனுடன் நடத்துவது தொடர்பில்  உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, செயற்றிட்டங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதுடன், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .